எமது தற்கால இளைஞர் யுவதிகள் அன்னிய மொழிகளில் வருகின்ற தமிழ் கொலைகளைப் பின்பற்றுக்கின்ற இவ்வேளையில்
எம்மவர் மத்தியிலிருந்து வெளிக்கொணரப்படுத் சஞ்சிகைகள் காலத்தின் தேவை கருத்தி செயற்பட வேண்டிய தேவை இருக்கின்றது. என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்கண்டு நடராசா தெரிவித்துள்ளார்.
பாண்டிருப்பு அகரம் சமூக அமைப்பு ஊடாக வெளியீடு செய்யப்பட்ட பல்சுவை விருந்து எனும் சிற்றிதழ் வெள்ளிக் கிழமை (06) மாலை கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அகரம் அமைப்பின் தலைவரும், விருந்து இதழின் ஆசிரியருமான செ.துஜியந்தன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் இதன்போது அவர் தெரிவிக்கையில்…..
கடந்த காலத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் ஆனால் தற்போது தமிழ் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்திய நாடகங்களிலும், கதைகளிலும் ஆங்கில வசன நடைகள்தான் பேசப்படுகின்றன. எனவே எமது இளம் சமுதாயம் தமிழர்களின் தொன்மைகளை எழுத்துருவில் கவிதை, கட்டுரை, சஞ்சிகை போன்ற வடிவங்களில் வெளிக்கொணர வேண்டும். இதனூடாக இளைஞர்களுக்கு மறுமலர்ச்சியையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தலாம்.
தற்போதைய காலகட்டத்தில் பாடத்திட்டங்களில்கூட சில விடையங்கள் மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன, சரித்திரங்கள் மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன, எனவே தமிழர்களின் சரித்திரங்களை தமிழ் இலக்கியவாதிகள், அறிஞர்களின் கைவண்ணங்களை தற்கால சஞ்சிகைகளினூடாக வெளிக் கொணரப்பட வேண்டும்.
இவ்வாறு வெளிக் கொணரப்படும் ஆக்கபூர்வமான செய்திகள் எமது இளம் சமுதாயத்தை எதிர் காலத்தில் தமிழ் உணர்வோடு தமிழர்களின் தொன்மைகளைப் பரப்பமுடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment