பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட புளுகுணாவை, கங்காணியார், குளங்களின் நீர்மட்டங்கள் அதிகரித்துள்ளமையினால் அதன்வான்கதவுகள் இன்று(27) வெள்ளிக்கிழமை திறந்துவிடப்பட்டுள்ளதாக மாகாண நீர்பாசன
தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால், அணைக்கட்டுகளுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் புளுகுணாவை குளத்தின் இருவான்கதவுகள் 9இஞ்சி அளவிலும், கங்காணியார் குளத்தின் நான்கு வான்கதவுகள் ஒரு அடி அளவிலும் திறந்துவிடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.
வெள்ளம் அதிகம் மக்களை பாதிக்காதளவிலேயே திறந்து விடப்பட்டுள்ளதாகவும், இதனால் மக்கள் அஞ்சத்தேவையில்லையெனவும் கூறினார். தொடர்ச்சியாக மழை அதிகரிக்கும் பட்சத்தில், அதிகவெள்ளம் ஏற்படவாய்ப்புள்ளது எனவும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment