அதிக மழை காரணமாக, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட நாற்பதுவட்டை, மாவடிமுன்மாரி வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
இதனால் மாவடிமுன்மாரி, நாற்பதுவட்டை, தாந்தாமலை போன்ற கிராமங்களுக்கு செல்லுகின்ற மக்கள் குறித்த வீதியினூடாக பயணசெய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் கொக்கட்டிச்சோலையிலிருந்து தாந்தாமலைக்கு செல்லுகின்ற பேரூந்து சேவையும் தடைப்பட்டுள்ளது. இதனால் பாடசாலை செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
தொடர்ச்சியாக மழை பெய்துகொண்டிருப்பதினால், மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன், இன்னும் வெள்ளநீர் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.


0 Comments:
Post a Comment