வெள்ள அனர்த்தம் தொடர்பில் கிழக்குமாகாண விவசாயஅமைச்சர் நேரில் சென்று மக்களைப் பார்வையிட்டதுடன், உரியஅதிகாரிகளிடம்
நடவடிக்கை மேற்கொள்வதற்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் சித்தாண்டியில் பெருவெள்ளம் ஏற்பட்டதாகமக்களின் வேண்டு கோளுக்கினங்க வெள்ளிக்க்ழமை (27) கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் அப்பிரதேசத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டதுடன் மேலும் வெள்ளம் ஏற்பட்டுள்ள பெருமாள்வெளி, மாவடிமுன்மாரி, ஈரளக்குளம் ஆகிய இடங்களிலில் வெள்ளத்தினால் பாதிக்கபட்ட மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்குரிய படகுச் சேவைக்கான எரிபொருளுக்குரிய நிதியுதவியினையும் அமைச்சர் இதன்போது வழங்கி வைத்தார்.
மேற்படி பிரதேசங்களுக்குரிய பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதேச சபைச் செயலாளர்கள் ஆகியோருடன் கலந்துரையாடி படகுச் சேவையை ஏற்படுத்துவதற்கான வசதிக்கான நடவடிக்கைகள் இதன்போது மேற்கொள்ளப்பட்டன.
மேலும் இவ்விடயம் இப்பகுதி மக்களின் இந்நிலமை தொடர்பில் நீர்பாசன மாகாண, மாவட்டப் பணிப்பாளாகளுடனும், செங்கலடிப் பிரதேசநீர்பாசன பொறியியலாளருடனும், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுடனும் தொடர்பு கொண்டு மக்களின் போக்குவரத்துக்குரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடைச்சகல், புழுக்கனாவை, கடுக்காமுனை, மீயான்கல்குளம், ஆனைசுட்டகட்டுக்குளம், கிருமிச்சைக்குளம், கங்காணியார் குளம் ஆகிய குளங்களில் மேலதிக நீர்வெளியேறுவதாகவும் தாழ்நிலப் பகுதியிலுள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறும் மற்றும் ஒலிபெருக்கி முலம் மக்களை அவதானப்படுத்துமாறும் இதன்போது அமைச்சர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
0 Comments:
Post a Comment