26 Jan 2017

கிழக்கு மாகாண சமூக சேவை பணிப்பாளராக மருதமுனை எம்.சி.அன்சார் நியமனம்

SHARE
(டிலா)

மருதமுனையைச் இலங்கை சேர்ந்த நிருவாக சேவை அதிகாரி எம்.சி.அன்சார் சமூக சேவைத் திணைக்களத்தின்
கிழக்கு மாகாண பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 கடந்த 2017-01-23ஆம் திகதி கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ இவருக்கான நியமனத்தை வழங்கியுள்ளார்.

இவர் கடந்த இரண்டு வருடங்களாக கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணைக்குழுவின் ஆணையாளராக கடமையாற்றிய நிலையிலேயே இவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த 12 வருடங்களில் காத்தான்குடி,ஏறாவூர்.ஓட்டமாவடி அகிய பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 Comments: