26 Jan 2017

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் -மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்தீன்

SHARE

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என அம்பாரை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்தீன்
தெரிவித்தாா்

அம்பாரை மாவட்டதில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தை (RIDP) ஒவ்வேறு பிரதேச செயலகங்களிலும் நடைமுறைப்படுத்தும் செயற்திட்டத்திற்கு இணங்க  கல்முனை பிரதேச செயலகம்,மற்றும் கல்முனை தமிழ் பிரதேச செயலகங்களில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு விளக்கம் அளிக்கும் செயலமர்வு(25) மாலை கல்முனை தமிழ் பிரதேச செயலத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தாா் மேலும் இங்கு உரையாற்றுகையில்,
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கிராமத்தில் நடைபெறும் சகல நிகழ்வுகள், முன்னெற்றகரமான செயற்பாடுகளில் பங்காளர்களாக இருக்க வேண்டும். இதனையே ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனவும் அரசாங்கமும் இதனையே எதிர்பாா்க்கின்றது.

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கடமைக்கு வரைவிலக்கணம் கிடையாது. எதிர்காலத்தில் கிராம மட்டத்திலிருந்து முன்னேற்ற அறிக்கைகள் பரிசீலனை செய்யப்படும். பொதுமக்களுக்கு சிறந்த சேவை சென்றடைவதற்காகவே கிராமங்கள் தோறும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தாா்.இந் நிகழ்வில் கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் கே.லவநாதன்,உதவி திட்டமிடல் பணிப்பாளர் பி.இராஜ குலந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.








SHARE

Author: verified_user

0 Comments: