(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
கலைகள் எமது பிரதேசத்தின் தனித்துவத்தை வெளிக்கொண்டு வர வேண்டும். என கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முஹம்மட் கனி தெரிவித்தார்.
கல்முனை பிரதேச செயலகத்தின் கலாசார அதிகார சபையின் வருடாந்த ஒன்றுகூடலும் "சுவதம்" சான்றிதழ் வழங்கி கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வும் (23) மாலை கல்முனை பிரதேச செயலகத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றும்போதே பிரதேச செயலாளர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய பிரதேச செயலாளர்;
பொதுவாக கலை என்பது நாங்கள் யார்? என்பதை அடையாளப்படுத்துவதாகும். கலையை வளர்க்கும் தன்மை ஒவ்வொருவருடைய மனங்களிலும், மூளைகளிலும் உள்ளன.கலைஞர்கள் கோபம், புறாமை, காழ்ப்புணர்ச்சி இல்லாமல் தெளிவான மனோநிலையோடு இருப்பது அவசியமாகும். கலைஞர்கள் அவ்வாறு தான் இருக்கிறார்கள்.
இன்று மருதமுனை கலைஞர்களால் வெளிக்காட்டப்படும் 'வாங்க பழகலாம்' நிகழ்ச்சி, அவர்களுடைய மொழிநடை கிழக்கு மாகாணத்தை கோடிட்டு காட்டுகின்றன.
கலை, இலக்கியங்கள் எமது வாழ்கை வழிமுறைகளை தேசிய ரீதியில் வெளிக்கொண்டு வருகின்றன. இந்த கலை இலக்கியங்கள் எமது பிரதேசத்தின் தனித்துவத் தன்மையை இழக்காமல் வெளிக்கொண்டு வருவது கலைஞர்களின் பொறுப்பாகும் என்றார்.







0 Comments:
Post a Comment