மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய், குவைத் சிற்றி பகுதியில் வீட்டுக் கூரையில் பொருத்தப்பட்டிருந்த நீர்த் தாங்கி பெண்ணின் மீது விழுந்ததில் அவர் படுகாயமடைந்து
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
குவைத் சிற்றி பகுதியில் வசிக்கும் பாத்திமா றினோஸா (வயது 38) என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது@ மட்டக்களப்பில் செவ்வாய்க்கிழமை (24.01.2017) பெய்த கடும் மழை மற்றும் காற்றுக் காரணமாக வீட்டின் கூரையோடு இணைந்ததாகப் பொருத்தப்பட்டிருந்த நீர்த் தாங்கி பெண்ணின் மீது திடீரென விழுந்துள்ளது.
இதனால் அப்பெண் கடும் காயங்களுக்குள்ளாகிய நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.
காயமடைந்த பெண் தற்போது தேறி வருவதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

0 Comments:
Post a Comment