26 Jan 2017

மஞ்சந்தொடுவாய் ஊருக்குள் நுழைந்த 10 அடி நீளமான முதலை கிராமத்தவர்களால் மடக்கிப் பிடிப்பு

SHARE
மட்டக்களப்பு – மஞ்செந்தொடுவாய் கிராமத்திற்குள் புதன்கிழமை (25.01.2017) காலை ஊருக்குள் நுழைந்த 10 அடி நீளமான முதலையை கிராமத்தவர்கள் பிடித்து பொலிஸார் மூலமாக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.


இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது@ கடந்த சில தினங்களாக கிழக்கில் பெய்து வந்த  அடைமழையின் காரணமாக ஏற்பட்ட நீரோட்டத்தில் இந்த முதலை திசை தடுமாறி ஊருக்குள் நுழைந்துள்ளது.

எனினும், நீர் வற்றியதும் முதலை கிராமத்திற்குள் கிடப்பதை அவதானித்த மீனவர்களும் கிராமமக்களும் முதலையை கயிற்றினால் கட்டி வைத்து விட்டு காத்தான்குடிப் பொலிஸாருக்கும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் அறிவித்ததன் பேரில் அந்த முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் வேறு நீர் நிலைகளில் விடுவதற்காக கொண்டு செல்லப்பட்டது.





SHARE

Author: verified_user

0 Comments: