மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்றுப் பிரதேசத்திலுள்ள நவகிரி நகர் முதியோர் சங்கத்திற்கு கதிரைகள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக் கிழமை (06) போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசாவின் ஐம்பதினாயிரம் ரூபாய் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் 66 கதிரைகள் வழங்கி வைக்கப்பட்டன.
போரதீவுப்பற்று பிரதேச செலாளர் என்.வில்வரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, சமூகசேவை உத்தியோகஸ்த்தர் சி.சிவலிங்கம், உள்ளிட்ட பலர் கந்து கொண்டு மேற்படி முதியோர் சங்கத்திற்கு கதிரைகளை வழங்கி வைத்தனர்
0 Comments:
Post a Comment