7 Jan 2017

சது.றாணமடு இந்து மகாவித்தியாலய மாணவர்கள் உயர்தரபரீட்சையில் சாதனை

SHARE
(இ.சுதா)

வெளியாகியுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட றாணமடு இந்து மகாவித்தியாலத்தில் முதத் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட கணித விஞ்ஞானப் பிரிவு மற்றும் தொழினுட்பபாட நெறிகளில் பரீட்சைக்கு தோற்றி மாணவர்களில் அதிகமானவர்கள் பல்கலைக் கழக அனுமதியினை பெற்று கிராமத்திற்கு மாத்திரமல்லாது மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

கணித விஞ்ஞானப் பிரிவில் நான்கு மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி மூன்று மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியினையும், தொழினுட்பப்பிரிவில் 23 மாணவர்கள் முதற் தடவையாக பரீட்சைக்குத் தோற்றி எட்டுமாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியினையும், கலைப்பிரிவில் ஒன்பது மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி மூன் ;கள் பல்கலைக்கழக அனுமதியினை பெற்றுள்ளமை பாடசாலையினை பொறுத்தளவில் வரலாற்றுச் சாதனையாகும்.

மாணவர்கள் பெறுபேறு மூலமாக பிரதேசத்திற்கும் கல்வி வலயத்திற்கும் ஏற்படுத்தியுள்ள சாதனைக்கு சம்மாந்துறை வலயக் கல்விப் கல்விப்பணிப்பாளர் சவுதுல் நஸீர் பாடசாலையின் அதிபர் கே.தியாகராஜா மற்றும் ஆசிரியர்கள் இமாணவர்கள் மற்றும் கல்விச் சமூகத்தினருக்கு நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்துள்ளார்.


SHARE

Author: verified_user

0 Comments: