7 Jan 2017

கல்வி அமைச்சினால் கிழக்கு மாகாணபாடசாலைகளில் காலை ஒன்று கூடலின் போது நல்லாட்சி அரசின்; இருவருட நிறைவுதினவிழா தொடர்பான சுற்று நிருபங்கள் அனுப்பிவைப்பு.

SHARE
(இ.சுதா)

நல்லாட்சி அரசாங்கமான துநாட்டின் நிருவாகத்தினை பொறுப்பேற்று இரு வருடங்கள் எதிர்வரும் 8ம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில் ஜனாதிபதியின் இரு வருட பதவிக்கால நிறைவினை
சிறப்பிக்கும் நோக்கில் அமைச்சரவை தீர்மானங்களுக்கு அமைவாக கல்வி அமைச்சின் அறிவுரைக்கு ஏற்றவகையில் கிழக்குமாகாண பிரதம செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தின் பிரகாரம் கிழக்கு மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளிலும் எதிர்வரும் 9 ஆம் திகதி திங்கட்கிழமைகாலை ஒன்று கூடலின் போது ஜனாதிபதியின்  இரு வருடநிறைவு தினம் தொடர்பான விசேட நிகழ்வுகளை நடாத்துமாறு கிழக்குமாகாணத்திலுள்ள சகலவலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு கடிதம் மூலமாக கிழக்குமாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் ஏ.விஜயானந்தமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார்.

குறிப்பாகவிசேடநிகழ்வில் தேசிக் கொடிஏற்றுதல் தேசியகீதம் இசைத்தல் காலை ஒன்று கூடலில் நல்லாட்சி அரசாங்கத்தின் முன்னெடுப்புக்கள் தொடர்பான உரைமற்றும் மாணவர் நாடாளுமன்றத்தினூடாக நல்லாட்சியின் பணிகளை எடுத்துக் கூறுமாறு பாடசாலை அதிபர்களிடம் கடிதம் ஊடாக கேட்டுள்ளார்.

SHARE

Author: verified_user

0 Comments: