கிழக்கு
மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் தலைமையில் ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேனவின் மட்டக்களப்பு வருகை தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று இடம்பெற்றது,
காத்தான்குடி
நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் முதலமைச்சரின் செயலாளர்
யூ எல் ஏ அசீஸ் உட்பட பொலிஸார் மற்றும் அரச அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்,
அத்துடன்
இதில் பல தனியார் சங்கங்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும்
பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தக்
கூட்டத்தில் எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
தலைமையில் முதலமைச்சரின் பங்களிப்புடன் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள
போதைப்பொருள் ஒழிப்பு பேரணி தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 Comments:
Post a Comment