மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பிரதான வீதியில் ஞாயிற்றுக் கிழமை (15) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 9 பேர் படுகாயடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…..
மட்டக்களப்பு தாளங்குடாவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்றுகொண்டிருந்த வட்டா ரக வாகனத்தின் சக்கரத்தில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக வாகனம் தடம் புரண்டதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் படுகாயமடைந்தவர்கள் பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலை, மற்றும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




0 Comments:
Post a Comment