கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையம் பிரதேச பண்ணையாளர்களுடன் இணைந்து பட்டிப்பொங்கல் விழாவினை ஞாயிற்றுக்கிழமை (15) பட்டிப்பளை மைதானத்தில் நடாத்தினர். இதன்போது பண்ணையாளர்கள் பொங்கல் பொங்கி பூசை வழிபாடுகளில் ஈடுபட்டனர். மேலும் மாடுகளுக்கு மாலை அணிவித்து நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டனர்.
இதில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பெர்ணாண்டோ, குறித்த பொலிஸ் நிலைய சமுதாய பிரிவு பொறுப்பதிகாரி கே.வரதராஜன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளதைப் படத்தில் காணலாம்.
0 Comments:
Post a Comment