12 Jan 2017

வாகரையில் மாவட்ட மட்ட இன ஒற்றுமைப் பொங்கல் விழா

SHARE
“இன ஒற்றுமையை வளர்க்க இளையோர் நாம் கொண்டாடும் இனிய தைப்பொங்கல் விழா” எனும் தொனிப்பொருளில் கிராம
இளைஞர் தலைமைத்துவ அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் (Rural Based Youth Leadership Development) மாவட்டப் பொங்கல் விழா மட்டக்களப்பு வாகரை கதிரவெளிப் பிரதேசத்தில் வியாழக்கிழமை (12.01.2017) இடம்பெற்றது.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDPஅனுசரணையுடன் ஐரோப்பிய உதவித் திட்டத்தின் (EUகீழ் கிராம மட்ட இளைஞர் தலைமைத்துவ அபிவிருத்தித் திட்டத்தில் பங்கு கொண்ட சுமார் நூறு இளைஞர் யுவதிகளை மையப்படுத்தி இந்த இளைஞர் இன ஒற்றுமைப் பொங்கல் விழா இடம்பெற்றதாக வாகரைப் பிரதேச செயலாளர் எஸ்.ஆர். ராகுலநாயகி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வாகரைப் பிரதேச செயலாளர் எஸ்.ஆர். ராகுலநாயகி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர்  கெங்காதரன் உட்பட பிரதேச செயலக அலுவலகர்கள், கிராம பொது மக்கள், கிராம இளைஞர் தலைமைத்துவ அபிவிருத்தித் திட்டத்தில் பங்கு கொண்ட இளைஞர் யுவதிகளும் கலந்து கொண்டனர்.
சமய கலாசார நிகழ்வுகளும் அங்கு இடம்பெற்றன.





SHARE

Author: verified_user

0 Comments: