மட்டக்களப்பு, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவின் கீழ் இயங்கும் கோட்டைமுனை சுகாதார வைத்திய அதிகாரி
அலுவலகமும் மட்டக்களப்பு மாநகர சபையும் இணைந்து டெங்குப் பரிசோதனை மற்றும் டெங்கு ஒழிப்பின் புகை விசிறும் நடவடிக்கை செவ்வாய், புதன் (10,11-01.2017) ஆகிய இரு தினங்களிலும் முன்னெடுக்கப்பட்டது.
இந்நடவடிக்கையில் 212 வீடுகள் பரிசோதனை செய்யப்பட்டதாக டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் வெளிக்கள நடவடிக்கைக்குப் பொறுப்பான கோட்டைமுனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் வீ.சி. சகாதேவன் தொரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 212 வீட்டு வளவுகள் எம்மால் பார்வையிட்டபோது அதில் 27 வீடுகள் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகக் கூடிய அபாயம் உள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது.
மேலும் 12 வீட்டுகளில் அதிகம் டெங்கு நுளம்புக் குடம்பிகள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டதால் அவ் வீட்டு உரிமையாளர்களுக்கெதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, மேலும், 6 வீடுகளுக்கு எச்சரிக்கை நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளது.
நுளம்புகள் பரவக்கூடிய இடங்களை வீட்டு உரிமையாளர்கள் கவனத்திலெடுத்து சுத்தப்படுத்திவைத்திருந்தால் குறிப்பிட்ட இடங்களில் டெங்கு நூளம்புகள் பரவுவதை தடுக்கமுடியும்.
இவ் விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி செயற்படுவார்களேயானால் டெங்கு நோயிலிருந்து தம்மையும் பாதுகாத்து மற்றவர்களையும் பாதுகாத்துக்கொள்ளலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்விரு தினங்களிலும் டெங்கு ஒழிப்புக்காக மோட்டார் இயந்திரத்தின் மூலம் புகை விசிறும் நடவடிக்கையும் இடம்பெற்றது.
சுகாதார திணைக்கள பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனை அதிகாரிகள், சுகாதார ஊழியர்கள் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்கள் இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கைத் திட்டத்தில் பங்கெடுத்திருந்தனர்.
0 Comments:
Post a Comment