7 Jan 2017

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 20 மாணவர்கள் கனிஷ்ர மாணவர் தலமைத்துவ பயிற்சிக்கு ரந்தணிகல பயணம்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து கனிஷ்ர 
மாணவர் தலமைத்துவ பயிற்சியில் கலந்து கொள்வதற்காக மாணவர்கள்  ரந்தணிகலையில் அமைந்துள்ள தேசிய மாணவர் படையணியின் பிரதான பயிற்சி நிலையத்திற்கு நேற்று பயணமாகியுள்ளனர்.
    
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள 1ஏவீ,1சீ தர பாடசாலைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட  20 மாணவர்கள் குறித்த பயிற்சியில் கலந்து கொள்வதற்காக பயணமாகியுள்ளனர். 
 
 இவர்களை அழைத்துச் செல்வதற்கான ஆரம்ப நிகழ்வு சிவானந்தா மைதானத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் 38 வது படையணியின் மட்டக்களப்பு மாவட்ட கட்டளை அதிகாரி லெப்ரினன் கேணல்.எம்.டபிள்யு.டீ.ஏ.விதானகே, படைப்பிரிவின் நிருவாக அதிகாரி லெப்ரினன். கே.எம்.தமீம், பயிற்சி நடவடிக்கை அதிகாரி இரண்டாம் லெப்ரினன்.எஸ்.காண்டீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
     
    ஓன்பது நாட்கள் நடைபெற இருக்கம் இப் பயிற்சியில் கலந்து கொள்கின்ற மாணவர்களினால் பாடசாலைகளில் சிறந்த தலைமைத்துவத்தை உருவாக்கும் நோக்குடன் பயிற்சி ஒழுங்கமைப்பு செய்யப்பட்டுள்ளதாக  பொறுப்பான நிருவாக அதிகாரி தெரிவித்தார்
SHARE

Author: verified_user

0 Comments: