26 Jan 2017

அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலையின் கற்பித்தல் பயிற்சி 30 ஆம் திகதி ஆரம்பம்.

SHARE
( ஏ.எல்.எம்.ஷினாஸ்)

அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலையின் 2016/2017 பயிலுனர்களுக்கான முதலாம் கட்ட கற்பித்தற் பயிற்சி எதிர் வரும் ஜனவரி 30 தொடக்கம்
பெப்ரவரி 20 ஆம் திகதி வரை மூன்று வார காலம் நடைபெறவிருப்பதாக கலாசாலை அதிபர் மௌலவி. ஏ. சி. ஏம். சுபைர் தெரிவித்தார்.

விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம், இஸ்லாம், ஆரம்பக்கல்வி, உடற்கல்வி ஆகிய ஆறு கற்கை நெறிகளில் பயற்சி பெறும் 322 பயிலுனர்கள் திருக்கோவில், அக்கரைப்பற்று, கல்முனை, சம்மாந்துறை கல்வி வலயங்களிலுள்ள 46 பாடசாலைகளுக்கு பயிற்சிக்காக அனுப்பப்பட உள்ளனர். இவர்களின் கற்பித்தல் பயிற்சியை மேற்பார்வை செய்து தேவையான நெறிப்படுத்தல்களையும், வழிகாட்டல்களையும் மேற்கொள்ள “கலாசாலையின் முழு நேர மற்றும் வருகைதரு விரிவுரையாளர்கள்” ஈடுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

பயிற்சிக்காக வருகைதரும் பயிலுனர்களுக்கு உரிய பாடசாலை அதிபர்களும், தொழில் வழிப்படுத்துனராகச் செயற்படவிருக்கும் சிரேஸ்ர ஆசிரியர்களும் தங்களது முழுமையான ஒத்துழைப்பை நல்கி சிறந்த பயிற்சி பெற உதவுவார்கள் என அதிபர் நம்பிக்கை தெரிவித்தார். இதேவேளை கற்பித்தல் பயிற்சியில் ஈடுபடவிருக்கும் பயிலுனர்கள் கடமை, கண்ணியம், ஒழுக்கம், நேரம் தவறாமை போன்ற விழுமியப் பண்புகளைக் கடைப்பிடிக்குமாறும் அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர்களால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. 

SHARE

Author: verified_user

0 Comments: