3 Jan 2017

வேலையில்லாத் திண்டாட்டத்தை பெருமளவு குறைப்பதிலும் கூடுதல் கவனம்

SHARE
 
இந்த ஆண்டில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு மேற்கொள்ளவுள்ள பல்வேறு செயல்திட்டங்களுக்கு மேலதிகமாக, ஜனாதிபதி இன்றைய தினம் ஆற்றிய உரையில் குறிப்பிட்டதைப் போன்று வறுமை ஒழிப்பையும், வீண்விரயத்தைத் தவிர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டு பல்வேறு பணிகளை ஆற்றவுள்ளதோடு, வேலையில்லாத் திண்டாட்டத்தை பெருமளவு குறைப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
திங்கள்கிழமை (02) முற்பகல் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சில் நiபெற்ற புதுவருட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதனைக் கூறினார்

அமைச்சர் ஹக்கீம் தமதுரையின்போது மேலும் தெரிவித்ததாவது,
சவால்கள் மிகுந்த இந்த ஆண்டில் எங்களது அமைச்சைப் பொறுத்தவரை கடும் வறட்சியுடன் கூடிய கோடை காலத்தை எதிர்நோக்குவதால், நன்கு திட்டமிட்ட அடிப்படையில் அதற்கு முகம்கொடுப்பதற்கான தயார்படுத்தலை மேற்கொண்டு வருகின்றோம்.

உலக வங்கியினதும், ஆசிய அபிவிருத்தி வங்கியினதும் நிதியுதவியுடனும், வெளிநாட்டு உதவிகளுடனும் நாடளாவிய ரீதியில் அநேக செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

2030ஆம் ஆண்டை இலக்காக் கொண்டு பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை காண்பதில் அரசு காட்டிவரும் அக்கறைக்கு ஏற்ப நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் கீழ் உள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களம் என்பவற்றினூடாக பல பில்லியன் ரூபாய்கள் செலவில் பாரிய செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்றார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், அமைச்சின் செயலாளர் என்.டீ.ஹெட்டிஆராச்சி, இராஜாங்க அமைச்சரின் செயலாளர் வீ.பி.பீ.கே.வீரசிங்ஹ, மேலதிகச் செயலாளர்கள் உட்பட அமைச்சின் உயரதிகாரிகளும், ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

SHARE

Author: verified_user

0 Comments: