ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தினை மதிக்கின்ற பரந்துபட்ட ஒற்றுமையுடன் கூடிய இலங்கைசமூகம் ஒன்றினைக் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற துரித வேலைத்திட்டங்களில் ஒன்றாகிய பாடசாலைமாணவரிடையே சமூக ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தினை கட்டியெழுப்புவதற்காகமுதற் தடவையாக வடகிழக்கு பாடசாலைகளில் 13 ஆம் திகதிவெள்ளிக்கிழமை தைப் பொங்கல் தினநிகழ்வினை நடாத்துவதற்கான அனுமதிக் கடிதம் அடங்கியசுற்றுநிருபம்கல்விஅமைச்சினால் மாகாணக்கல்வித் திணைக்களங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றின் பிரதிகள் வலயக்கல்வி அலுவலகங்களுக்கும் இவடக்கு இகிழக்குமாகாணத்திலுள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
பாடசாலை மட்டத்தில் சமய விழாக்களை நடாத்துவதன் மூமமாக பல்லினத்தன்மையுடன் கூடியசமூகத்தினை கட்டியெழுப்பும் நோக்கில் நல்லாட்சி அரசாங்கத்தினால் இவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
தைப் பொங்கல் நிகழ்வினைநிறைவு செய்தபின்னர் இது தொடர்பான சுருக்கமான அறிக்கையினைபுகைப்படங்களுடன் pனஅளாயவொய@பஅயடை.உழஅ எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறும். மேலதிகவிபரங்களுக்குகல்வி அமைச்சின் இணைப்பாடவிதான செயற்பாடுகள் இவழிகாட்டல் ஆலோசனைமற்றும் சமாதானகல்விக் கிளையின் பணிப்பாளரது 0112785866 என்றதொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு விபரங்களைபெற்றுக் கொள்ளுமாறு கல்விஅமைச்சின் பாடசாலை செயற்பாட்டுக்கான மேலதிகசெயலாளர் ஏ.எஸ்.ஹேவகே கேட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment