2 Jan 2017

சிறுவன் ஊதிய பலூன் வெடித்துச் சிதறி சுவாசக் குழாய் அடைத்ததாலேயே மரணம் உடற் கூற்றுப் பரிசோதனையில் தெரிவிப்பு

SHARE
புத்தாண்டு தினத்தை வரவேற்பதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட தேவாலயத்தில் பலூன் ஊதி விiயாடிக்கொண்டு நின்ற சிறுவன் திடீரென மயங்கி விழுந்து மரணத்தமைக்கான உடற் கூற்றுப் பரிசோதனை
ஞாயிற்றுக்கிழமை (01.01.2017) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.

நிபுணத்துவ சட்ட வைத்திய அதிகாரி (ஊழளெரடவயவெ துரனiஉயைட ஆநனiஉயட ழுககiஉநச) ஸ்ரீராம் ஜெயக்கொடி மேற்கொண்ட உடற் கூற்றுப் பரிசோதனையின்போது சிறுவன் திடீரென வாசற் படியில் மயங்கி விழுந்து மரணித்தமைக்கான காரணம் சிறுவன் ஊதி வெடித்துச் சிதறிய  பலூனின் இறப்பர் துண்டுகள் சிறுவனின் சுவாசக் குழாயை இறுக அடைத்துக் கொண்டதால் சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறி மரணித்துள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஏறாவூர்  பொலிஸ் பிரிவிலுள்ள தளவாய்க் கிராமத்தில் சனிக்கிழமை இரவு தொடங்கி ஞாயிறு அதிகாலை வரை புத்தாண்டுப் பிறப்புக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தயாகரன் மதுஷான் (வயது 11) என்ற சிறுவன் ஞாயிறு (01.01.2017) அதிகாலை 5 மணியளவில் திடீரென மயங்கி விழுந்து மர்மமாக மரணித்திருந்தான்.

உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சிறுவன் அனுமதிக்கப்பட்ட போதும் சிறுவன் ஏற்கெனவே இறந்து விட்டிருந்த நிலையில் சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு உடற் கூற்றுப் பரிசோதனை இடம்பெற்றது. இதன் போது சிறுவனின் மர்ம மரணத்திற்கான காரணம் கண்டறியப்பட்டது.
விசாரணைகளின் பின்னர் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.



SHARE

Author: verified_user

0 Comments: