வந்தாறுமூலை தேவபுரம் எ.பி.சி வீதியை வசிப்பிடமாகக் கொண்ட ராசு பரமேஸ்வரி என்பவரின் வீடு கடந்த வெள்ளிக் கிழமை ஏற்பட்ட தீவிபத்தால் முற்றாக சேதமுற்றது. இவ்விடயத்தினை
அறிந்து அவ்விடம் சென்ற கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் அவர்கள் வீட்டினைப் பார்வையிட்டதுடன் உலர் உணவுப் பொதியினை வழங்கி வைத்தார்.
பின்பு விவசாய அமைச்சர் உட்பட அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தா. தங்கவேல், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மண்முனை வடக்கு கிளையின் உபசெயாலாளர் பொன். மனோகரன், தேவபுரம் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் கா. இராமச்சந்திரன், கிராம சேவை உத்தியோகஸ்தர் ஜி.எ. விஜயகுமார், சனசமுக நிலையச் செயலாளர் வெ. சசிகரன் மற்றும் பல தொணடர்களும் தீவிபத்து இடம்பெற்ற இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கூரை விரிக்கை, சமையற் பாத்திரங்கள், அரிக்கன் விளக்கு, மண்வெட்டி, கத்தி, போன்ற வீட்டுப் பாவனை உபகரணங்கள், உடு துணிகள், மற்றும் வீட்டின் சிறுவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள், பாடசாலை சீருடைகள் கொள்வனவு செய்வதற்கான நிதி என்பன அமைச்சரால் வழங்கப்பட்டது. அத்துடன் அமைச்சருடன் சென்ற தொண்டர்களால் தீவிபத்திற்குள்ளான வீடு தற்காலிகமாக திருத்திக் கொடுக்கப்பட்டதுடன் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிரந்த வீடு அமைத்துக் கொடுப்பதற்காக உரிய அதிகாரிகளுடன் அமைச்சர் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment