2 Jan 2017

சமாதான எண்ணக்கரு சகல சமூக இளைஞர்களின் உள்ளத்திலும் விதைக்கப்பட வேண்டும் - மட்டக்களப்பு இயேசு சபைத் துறவி அடிகளார் ஜேசெப் மேரி.

SHARE
சமாதான எண்ணக்கரு சகல சமூகங்களையும் சேர்ந்த இளைஞர்களின் உள்ளத்திலும்  
விதைக்கப்பட்டாலேயொழிய நீடித்த சமாதானத்தை வேறு வழிகளில் அடைய முடியாது என மட்டக்களப்பு இயேசு சபைத் துறவி அடிகளார் ஜேசெப் மேரி தெரிவித்தார்.

புத்தாண்டில் முன்னெடுக்கப்பட வேண்டிய முக்கியமான நடவடிக்கைகள் தொடர்பாக அவர் திங்களன்று (02.01.2017) கருத்து வெளியிட்டார்.
இவ்வாண்டில் அரசும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இளைஞர்களுக்கான வேலைத் திட்டங்களை அமுல்படுத்தும்போது அதில் சமாதான சௌஜன்ய செயற்பாட்டுக்கு முதனிலை அளிக்க வேண்டியது காலத் தேவையாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இளைஞர் அபிவிருத்தி சமாதான வேலைத் திட்டங்கள் பற்றித் தொடர்ந்து குறிப்பிட்ட அவர்@ உலக இயங்கியலில் (னுலயெஅiஉள) இளைஞர்களின் பங்களிப்பு இன்றியமையாதது.

ஆகையினால், அது நன்மையில் தொடங்கி நன்மையில் முடிவடைவதற்கான வழிவகைகளை நாம் இளைய சமுதாயத்தினருக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

சமீபத்தில் காலமான பிடல் காஸ்ட்ரோ தன்னுடைய நாட்டின் விடிவுக்காக தன்னுடைய இளமைக் காலத்தை அர்ப்பணித்தவர்.

அன்று அவரைத் திட்டித் தீர்த்த நாடுகள் இப்பொழுது அவரது மறைவு கண்டு அவருக்குப்ட புகழாரம் சூட்டி அனுதாபம் தெரிவிக்கின்றன.

இலங்கை நாட்டிலும் சமாதானம் தளைத்தோங்கி மக்களுக்கு விடிவும் சுபீட்சமும் தர வேண்டுமாகில் இந்த நாட்டில் வாழும் அனைத்து சமூக இளைஞர்களின் உள்ளத்திலும் சமாதானம் விதைக்கப்பட வேண்டும்.

சிங்கள தமிழ் இஸ்லாமிய இளைஞர்கள் என்போர் வெறுமனே இனத்துவேஷத்தோடு நோக்கப்பட வேண்டியவர்கள் அல்லர்.

அவர்கள் இதய அனுசரணையோடு அணுகப்பட வேண்டியவர்கள். அவர்கள் இணைய வேண்டும். அடுத்த வீட்டில் எந்த இனம் வாழ்கிறார்கள் என்று இனத்துவேஷத்தோடு சிந்திப்பதை விட அடுத்த வீட்டில் வசிப்பவருக்கு  எப்படி உதவலாம் என்பது பற்றிச் சிந்திப்பதே சமாதானத்திற்கு வழிவகுக்கும்.
நாட்டின் சட்டத்தை அனைத்திற்கும் மேலாக நாம் மதிக்கின்றோம்.

ஆனால், இங்குள்ள பேரின மதவாத  குருக்களின் ஆத்திரமூட்டும் செயல்களைப் பார்த்து சிறுபான்மை இன இளைஞர்கள் அதிர்ந்து போய் ஆத்திரப்பட்டு நி;ற்க வேண்டிய சூழ்நிலை கடந்த வருடம் இருந்தது.

அத்தகைய துரதிருஷ்ட வசமான சூழ்நிலை  இந்த ஆண்டும் நீடிக்க விடக் கூடாது. பேரின மதவாத மதகுருக்கள் நீதியையும் சட்டத்தையும் அவமதிக்க, நீதிமன்ற உத்தரவை நடுத்தெருவில் வைத்துக் கிழித்தெறிய இனிமேலும் இடமளிக்கக் கூடாது.

அவ்வாறு அனுமதித்தால் துடிப்புள்ள இளைஞர்கள் ஆத்திரத்தால் உந்தப்பட்டு கட்டுமீறிப் போவார்கள். அதனால் சமாதானம் சீர் குலையும், எனவே ஆட்சியாளர்கள் இந்த விடயத்தைப் பொடுபோக்காக எடுத்துக் கொள்ளாது சீர் தூக்கிப் பார்க்க வேண்டும்.

சமாதானத்தைச் சாகடிக்கும் சகல நடவடிக்கைகளையும் உடன் நிறுத்த வேண்டும்.

கடைசியாக எங்களைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய, கண்ணியப்படுத்த வேண்டிய நீதிமன்றமும் அதன் கட்டளைகளும் கசக்கி எறியப்படுமாகில் கலகம் உண்டாகி அதனால் கண்ணீரும் கம்பலையும்தான் மிஞ்சும்.

சமாதானத்துக்குச் சாபக்கேடான சகல வழிகளும் மூடப்பட வேண்டும். இல்iயேல் அழிவு நமக்கு அருகில் வந்து கதவைத் தட்டும். அத்தகையதொரு துரதிருஷ்டம் நிகழ இவ்வாண்டில் நாம் இடமளிக்கக் கூடாது.” என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: