28 Jan 2017

போரதீவுப்பற்று பல வீதிகள் வெள்ளத்தினால் தடை. பிரதேச சபை போக்குவரத்து வசதி.

SHARE
(பழுகாமம் நிருபர்)

மட்டக்களப்பு மாவட்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. போரதீவுப்பற்று பிரதேசத்தில் வெள்ளத்தின் காரணமாக வெல்லவெளி-மண்டூர் வீதி வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்டமையினால் வாகனங்களின் போக்குவரத்து ஸ்தம்பிதமானது.
இதனையிட்டு போரதீவுப்பற்று பிரதேச சபை தங்களுக்கு சொந்தமான உழவுஇயந்திரங்கள் மூலம் மக்களின் போக்குவரத்து வசதிகளை மேற்கொண்டு அவர்களின் அத்தியவசிய போக்குவரத்து தேவைகளை  சீர்செய்துள்ளதாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆதித்தன் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட கிராமங்களில் வீதிகள் வெள்ளங்களினால் மூடப்பட்ட நிலையில் இருந்தது. அவற்றுக்கான வடிகான்களை எமது ஊழியர்கள் செப்பனிட்டு கொடுத்துவருகின்றனர். மேலும் எங்கேயும் தற்காலிகமாக வடிகான்கள் தேவையாயின் மக்களுக்காக சேவை செய்ய தாங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.







SHARE

Author: verified_user

0 Comments: