27 Jan 2017

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவுகின்ற மழையுடனான காலநிலையானது எதிர் வரும் 30 ஆம் திகதிவரைக் காணப்படும் -சூரியகுமாரன்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவுகின்ற மழையுடனான காலநிலையானது எதிர் வரும் 30 ஆம் திகதிவரைக் காணப்படும். 30 ஆம் திகதிக்குப் பின்னர் மழை ஓய்வடையக்கூடிய சாத்திக்கூறுகள் காணப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட
வானிலை அவதான நிலையத்தின் பெறுப்பதிகாரி கே.சூரியகுமாரன் வெள்ளிக்கிழமை (27) காலை தெரிவித்துள்ளார்.

மிக நீண்ட வரட்சின்குப் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது அதிக மழை பெய்து வரும் இந்நிலையில் வியாழக்கிழமை (26)  பகல் வேளையில் மழை ஓய்ந்திருந்த போதிலும், வியாழக்கிழமை இரவிலிருந்து மீண்டும் மழை பொழியத் தொடங்கியுள்ளது. வெள்ளிக்கிழமை (27) காலை அதிக மழையுடன் பலத்த காற்றும் வீசிவருகின்றது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை (27) காலை 8.30 மணியுடன் கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பாகங்களிலும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளன.

அந்த வகையில் மட்டக்களப்பு நகரில் 31.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், மைலம்பாவெளியில் 71.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பாசிக்குடாவில் 33.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உறுகாமத்தில் 159.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உன்னிச்சையில் 127.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், வாகனேரியில் 56.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், தும்பங்கேணியில் 95.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், நவகரியில் 77.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், வாகரை கட்டுமுறிவு பகுதியில் 29.6 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி கே.சூரியகுமாரன் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் நவகிரிக் குளத்தில் நீர் மட்டம் 26 அடி நீரும், தும்பங்கேணிக் குளத்தில் நீர் 12 அடி நீரும் உள்ளதாக இக்குளங்களுக்குப் பொறுப்பாக பொறியியலாளர்  மு.பத்மதாஸன் தெரிவித்தார். 

உன்னிச்சைக்  குளத்தில் 30 நீர் உள்ளதோடு, 4 அடி உயரத்தில் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது, 

இதேவேளை உறுகாமம் குளத்தில் 17 அடி நீர் உள்ளதோடு 2 வான்கதவுகள் 7 அடி உயரத்தில் திறக்கப்பட்டுள்ளதுடன் இக்குளத்தில் 1 அடி 4 இஞ்சி மேலதிக நீர் வெளியேறுகின்றது.  

உறுகாமம் குளத்தில் 16 அடி 9 இஞ்சி நீர் உள்ளதோடு இக்குளத்தில் 1 அடி மேலதிக நீர் வெளியேறுகின்ற இந்நிலையில் 7 அடி உயரத்தில் 2 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன, 

வெலிக்காக்கண்டிக் குளத்தில் 16 அடி 3 இஞ்சி நீர் உள்ளதோடு இக்குளத்தில் 8 இஞ்சி அளவு மேலதிக நீர் வெளியேறுகின்றது,

கட்டுமுறிவுக் குளத்தில் 11 அடி  10 இநீர் உள்ளதோடு,  அடி 4 இஞ்சி அளவு மேலதிக நீர் வெளியேறுகின்றதாக,

வாகனேரிக்குளத்தில 19 அடி 2 இஞ்சியும், வடமுனைக் குளத்தில் 10 அடி நீரும்,  கித்துள்வெவக் குளத்தில் 8 அடி 6 இஞ்சி நீரும், 

இக்குளங்களுக்குப் பெறுப்பான பொறியியலாளர் எஸ்.நிறோஜன் தெரிவித்தார்.

இதேவேளை படுவான்கரைப் பகுதியில் அமைந்துள்ள வெல்லாவெளிக்குளம், பேரியபோரதீவு பெரியகுளம், கோவில்போரதீவுக்குளம், பழுகாமம் குளம், உள்ளிட்ட சிறிய குளங்கள் மழை நீரில் நிலம்பி வழிந்து செல்வதனையும் அவதானிக்க முடிகின்றது.






SHARE

Author: verified_user

0 Comments: