28 Jan 2017

சம்மாந்துறை பிரதேசசபையின் ஆட்சியை நபீர் பௌண்டேசன் கைப்பற்றும்

SHARE


(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

சம்மாந்துறை பிரதேசசபையின் ஆட்சியை நபீர் பௌண்டேசன்  கைப்பற்றும் என பௌண்டேசனின் ஸ்தாபக தலைவரும் பிரபல சமூகசேவையாளரும் பொறியியலாளருமான யு.கே. நபீர் தெரிவித்தார். 
அம்பாரைமாவட்டத்தில் கடந்த 26 வருடங்களாக சமூகசேவையில் ஈடுபட்டுவரும் நபீர் பௌண்டேசனின்  ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடு (27.01.2017)  சம்மாந்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. 
இங்கு ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறுதெரிவித்தார்.

இன்று பணத்திற்காகவும் வியாபாரத்திற்காகவும் அரசியலை செய்கிறார்கள். நாம் மக்களின் தேவைகளை தெரிந்துவைத்திருக்கின்றோம். மக்களுக்கு சேவை செய்திருக்கிறோம். மக்கள் எம்மை அரசியலில் எதிர்பார்க்கிறார்கள். எதிர்காலத்தில் அம்பாரை மாவட்டத்தில் சகல உள்;ராட்சி மண்றங்களிலும் போட்டியிடவுள்ளோம். இதற்கான வேட்பாளர்கள் ஏற்கனவே தயார் படுத்தப்பட்டு விட்டார்கள்.

சம்மாந்துறை பிரதேசசபையின் ஆட்சியை நாம் கைப்பற்றுவோம். கல்முனை மாநகரசபையில் மூன்று ஆசனங்களை பெறுவோம். காரைதீவிலும் ஒரு ஆசனத்தை பெறுவோம். தேசிய அரசியல் கட்சிகள் எம்மோடு பேசிக்கொண்டிருக்கின்றன. அவர்களோடு இணைந்து போட்டியிடுவதா அல்லது தனித்து போட்டியிடுவதா? என்பதை காலம் தீர்மாணிக்கும்.

அரசியலுக்கு அப்பால் அம்பாரை மாவட்டத்தில் 2018 ஆம் ஆண்டில் இரண்டு ஆயிரம் பேருக்குn தாழில் வாய்பை பெற்றுக் கொடுக்கவுள்ளோம்.  நபீர் பௌண்டேசன் அம்பாரைமாவட்டத்தில் இருக்கும் வரை இனி ஒருபோதும் இவர்களுடைய பூச்சாண்டி அரசியல் மக்கள் மத்தியில் செல்லுபடியாகாது என்றார்.

இந்த ஊடகமாநாட்டில்  நபீர் பௌண்டேசனின் செயலாளர் எம்.எம்.எம்.முபாறக், சம்மாந்துறை மத்தியகுழுவின் தலைவர் கே.எல். அபூசாலி, உபதலைவர் எம்.எஸ்.எம்.றியால், கல்முனை தொகுதி அமைப்பாளர் ஸாதிக் எஸ். முகம்மட், சாய்ந்தமருது அமைப்பாளர் யு.எல்.ஜிப்ரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: