(க.விஜி)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் நல்லாட்சி அரசாங்கத்தின் நிறைவு விழா கல்முனை அஸ்ரஃப் ஞாபகார்த்த வைதியசாலையில் இன்று (8.1.2017) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் வைத்தியசாலை வளாகத்தில் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எவ். ரகுமான் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஆத்மீக அதிதிகளாக கல்முனை விகாரதிபதி ரண்முத்துக்கல சங்கரத்தன தேரர், கே.மோகானந்த குருக்கள்,அருட்தந்தை விரைனர்,மௌலவி ஏ.அஸ்வர்,ஆகியோர்களுடன் சத்திர சிசிச்சை நிபுணர் வைத்தியர் பீ.கே.ரவீந்திரன், சிறுவர் நோய் வைத்திய நிபுணர் விதுரங்க சேரம்,மயக்க மருந்து நிபுணர் கே.தேவகுமார்,பொது வைத்திய நிபுணர் அஸ்வேக்,தரநிர்ணய பிரிவு வைத்திய அதிகாரி எம்.சீ.எம்.மாஹிர்,உட்பட தாதி உத்தியோகஸ்தர்கள்,வைத்தியசாலை ஊழியர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.முதலில் வைத்தியசாலை அத்தியட்சகர் ஏ.எல்.எவ்.ரகுமான் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்.தேசியகீதம் இசைக்கப்பட்டது.சுமார் நூறு வைத்தியசாலை ஊழியர்கள் இரத்ததானம் செய்தார்கள்.இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் துணிச்சல் மிக்க மக்கள் சேவையைப்பற்றி அதிதிகளால் பேசப்பட்டதுடன் நல்லாட்சி அரசாங்கத்தின் ஊழல் அற்ற உன்னதமான அரச உறுதிமொழி நிகழ்வுக்கு வருகைதந்தவர்களால் சத்தியபிரமாணம் முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
0 Comments:
Post a Comment