8 Jan 2017

இக்னேசியஸ் சவரிமுத்து அடிகளாரின் வெள்ளிவிழா தொண்டுப்பணிக்கான கௌரவிப்பு நிகழ்வு

SHARE
மறைப் பணியில் 25 வருடங்களை நிறைவு செய்துள்ள அடிகளார் இக்னேசியஸ் சவரிமுத்து அவர்களைப் பாராட்டி கௌரவிக்கும்
வெள்ளிவிழா நிகழ்வு மட்டக்களப்பு தன்னாமுனை புனித சூசையப்பர் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (08.01.2017) இடம்பெற்றது.

தன்னாமுனைப் பங்குப் பிரிவு மக்கள், நற்கருணை நாதர் சபையைச் சேர்ந்த போதகர்கள், கன்னியாஸ்திரிகள், மற்றும் அடிகளார் இக்னேசியஸ் சவரிமுத்து அவர்களின் உற்றார் உறவினர்கள் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசெப், நற்கருணை நாதர் சபையின் (டீடநளளநன ளுயஉசயஅநவெ ஊழபெசநபயவழைn) இலங்கைக்கான பிரதிநிதி அடிகளார் டிலான் பெர்னாண்டோ (ளுளுளு) உள்ளிட்ட இன்னும் பலர் நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

விசேட திருப்பலிப் பூசை, ஆராதனை என்பவற்றோடு அடிகளார் இக்னேசியஸ் சவரிமுத்து அவர்களைப் பாராட்டி கௌரவிப்பும் இடம்பெற்றது.
மட்டக்களப்பு தன்னாமுனையைச் சேர்ந்த இக்னேசியஸ் சவரிமுத்து அவர்கள் தனது (ஐபயெவரைள ளுயஎயசiஅரவவர) 5 வயதில் தந்தையை இழந்த நிலையில் இந்தியா தமிழ் நாடு திண்டிவனம் சென்று அங்கு 3 வருடங்கள் போதகர் மறைக் கல்வியை மேற்கொண்டார்.

மறைக் கல்வியை முடித்துக் கொண்டு மீண்டும் இலங்கைக்கு வந்த அவர் மூதூர், சொறிக்கல்முனை, தாண்டவன்வெளி ஆகிய பங்குப் பிரிவுகளில் 7 வருடங்கள் மறைத் தொண்டுப் பணியை நிறைவு செய்;த நிலையில் கொழும்பு புறக்கோட்டையிலுள்ள நற்கருணை நாதர் ஆலயத்தில் (டீடநளளநன ளுயஉசயஅநவெ ஊழபெசநபயவழைn) 15 வருடங்கள் பணியாற்றியதோடு மொத்தமாக 25 வருடங்கள் மறைப் பணியை நிறைவு செய்துள்ளார்.
மேலும், அமெரிக்கா நியூயோர்க்கில் 2 வருடங்கள் பணிபுரிந்த அடிகளார் இக்னேசியஸ் சவரிமுத்து அவர்கள் வறிய மக்களுக்கு உதவுவதை மறைப்பணியோடு இணைத்துக் கொண்டவர்.

தற்பொழுது 72 வயதாகும் அன்னாரின் மறைப் பணியையும் சமூகத் தொண்டையும் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜேசெப், நற்கருணை நாதர் சபையின் (டீடநளளநன ளுயஉசயஅநவெ ஊழபெசநபயவழைn) இலங்கைக்கான பிரதிநிதி அடிகளார் டிலான் பெர்னாண்டோ (ளுளுளு) தன்னாமுனைப் பங்குப் பிரிவு மக்கள், நற்கருணை நாதர் சபையைச் சேர்ந்த போதகர்கள், கன்னியாஸ்திரிகள், மற்றும் அடிகளார் இக்னேசியஸ் சவரிமுத்து அவர்களின் உற்றார் உறவினர்கள் ஆகியோர் பாராட்டி கௌரவித்ததோடு பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.





SHARE

Author: verified_user

0 Comments: