(வ.புஸ்பக்குமாார்)
ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து, எதிர்வரும் 11ஆம் திகதி, திருகோணமலையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று
முன்னெடுக்கப்படவுள்ளது. புதன்கிழமை காலை 9.30 மணியளவில், உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள சட்ட உதவி மைய வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னனெடுக்கப்படவுள்ளதாக, திருகோணமலை மாவட்ட சமூக ஆர்வலர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
'வடக்கு, கிழக்கு இணைந்த சமஸ்டி அதிகாரப் பகிர்வு வேண்டும், களப்பு நீதி மன்றம் உருவாக்கப்பட்டு, நீதி நிலைநாட்டப்படல் வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு, அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படல் வேண்டும்' போன்ற கோரிக்கைகள் இதன்போது முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நடந்தேரிய சித்திரவதை படுகொலைகளை விசாரிப்பதற்கான விசேட பொறி முறை உருவாக்கப்பட வேண்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியும் இழப்பீடும் வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளும் இவற்றுள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று சட்ட உதவி மையத்தின் பிரதிநிதிகள் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment