(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
அம்பாறை மாவட்டத்தில் இயங்கிவரும் மஸ்ஜிதுகள், அறபுக் கல்லூரிகள் , மக்தபுகள் சம்பந்தமாகவும், உலமாக்களோடு தொடர்புடைய தகவல்கள், சிவில் சமூக உயர் பதவிவகிப்போர் தொடர்பான திருத்தப்பட்ட
புதிய தகவல்களை சேகரிக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாக மாவட்ட ஜம்மிய்யத்துல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா(மதனி) தெரிவித்தார்.
புதிய தகவல்களை சேகரிக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாக மாவட்ட ஜம்மிய்யத்துல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா(மதனி) தெரிவித்தார்.
நற்பட்டிமுனை ஜூம்ஆ மஸ்ஜித் கேட்போர் கூடத்தில் (22) நடைபெற்ற அம்பாறை மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு இதற்குப் பொறுப்பாக விரிவுரையாளர்களான அஷ்ஷெய்க் எப்.எம்.ஏ. அன்ஸார் மௌலானா (நளீமி), அஷ்ஷெய்க் ஏ.எல். நாஸிர் கனி(ஹாமி), ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர்களான அஷ்ஷெய்க் யு.எம். நியாஸி (ஷர்க்கி), இஸட்.எம். நதீர்( ஷர்க்கி), பொருளாளர் எம்.ஐ. ஹூஸைனுதீன் (றியாழி) ஆகியோர் செயலாற்றுக் குழுவாகப் பிரேரிக்கப்பட்டனர்.
மேற்படி தகவல் திரட்டு வினாக் கொத்துவடிவத்தில் 15 அம்சங்களை உள்ளடக்கியதாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள 14 கிளைகளின் தலைவர்கள், செயலாளர்கள் மூலம் தகவல் சேகரிக்கப்பட்டு, அவை அம்பாறை மாவட்ட முஸ்லிம் நலன்களையும், கலாசார, பண்பாட்டு நிலையங்களையும் பிரதிபலிக்கும் வரலாற்று ஆவணமாக நூல் வடிவில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட இருப்பதாக பிரதம ஆசிரியர் அஷ்ஷெய்க் எப்.எம்.ஏ. அன்ஸார் மௌலானா(நளீமி) ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment