24 Jan 2017

அம்பாரை மாவட்டத்தின் தாழ்நிலப் பிரதேசங்கள் நீரில் மூழ்கும் அபாயம்

SHARE

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

அம்பாரை மாவட்டத்தில் கடந்த மூன்று(03) தினங்களாக பெய்துவரும் அடை மழை காரணமாக மாவட்டத்தின் தாழ்நிலப் பரதேசங்கள் பல நீரில் மூழ்கி வருவதை காணமுடிகிறது.
இன்று காலை (24.01.2017) கல்முனையில் பெய்த கடும் மழை காரணமாக நகரின் பிரதான தபால் அலுவலகத்திற்கு செல்லும் வீதி நீரில் மூழ்கியது. இதனால் இந்தவீதியிலுள்ள இலங்கை மீன்சார சபை, வீடமைபப்பு அதிகார சபை, இலங்கை வங்கி, மீன்பிடித் திணைக்களம், தபால் அலுவலகம் மற்றும் பிரதேச செயலகங்களுக்கு வரும் பொதுமக்கள் பல்வேறு அசௌவ்கரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்

பாண்டிருப்பு சுனாமி வீட்டுத்திட்டத்தின் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளநீரினால் நிரம்பி உள்ளது. தற்போது பெய்துவரும் அடை மழை தெடர்ந்து பெய்தால் இந்தப் பகுதி நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். நற்பிட்டிமுனை கிட்டங்கி பாலத்தின்னூடக அதிகளவான வெள்ளநீர் பாய்ந்து செல்கின்றது. எனினும் கிட்டங்கி வீதியின் பிரதான போக்குவரத்துக்கு தடை ஏற்படவில்லை.

இதேவேளை கடும் மழை காரணமாக மருதமுனை, பெரியநீலாவணை போண்ற பிரதேசங்களின் தாழ் நிலங்களும் நீரில் மூழ்கிவருகின்றன. மருதமுனை பிறான் சிற்றி வீட்டுத்திட்டம், 65 மீற்றர் வீட்டுத்திட்டம், மஸ்ஜிதுல் இஸ்லாம் நகர் போன்ற வீட்டுத்திட்டங்களிலும் வெள்ளநீர் மட்டம் உயர்ந்து வருகின்றன.

பிரதேசத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்படைந்துள்ளது. சில பாடசாலைகளிலும் வெள்ளநீர் நிரம்பிவருகிறன. வயல் நிலங்களில் நீரில்லை எனத் தவித்த விவசாயிகள், தற்போது நெற்பயிர் செய்கையின் கதிர் பறியும் காலமாக உள்ளதால் பெய்துவரும் அதிகளவான மழையினால் நெற்கதிர்கள் வெள்ளநீரில் அடித்துச் செல்லும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.


SHARE

Author: verified_user

0 Comments: