(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
பெரியநீலாவணை புலவர்மணி சரிபுத்தீன் வித்தியாலையத்தில் இருந்து 2016 ஆம் ஆண்டில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு (19) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றும் போது விளையாட்டுத்துறை பிரதி அமைசசர் எச்.எம்.எம்.ஹரீஸ் இவ்வாறு தெரிவித்தார்.
பாடசாலையின் அதிபர் எம்.எம்.முகம்மது நியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தநிகழ்வில் அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்;
பெரியநீலாவணை சரிபுத்தீன் வித்தியாலையம் இந்தப் பிரதேசத்தில் மிகவும் பழமைவாய்ந்த ஒரு பாடசாலையாகும். இந்தப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதற்கு பின்னர் ஆரம்ப்பிக்கப்பட்ட பல பாடசாலைகள் இன்று அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் பெரியநீலாவணை சரிபுத்தீன் வித்தியாலையம் அபிவிருத்தி செய்யப்படமையானது தரதிஸ்ட்டவசமானதாகும்.
இந்தப் பாடசாலையில் இதுவரை மூன்று மாடிக்கட்டிடம் இல்லை. இந்தக்குறை தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. இதற்காக 21 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெரியநீலாவணை புலவர்மணி சரிபுத்தீன் வித்தியாலயத்தின் மைதானம் விரைவில் அபிவிருத்தி செய்யப்படும். இதேபோன்று எதிர்வரும் 2018 ஆம் ஆண்டில் இந்தப் பாடசாலையில் உயர்தர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும். இதற்கு பாடசாலை சமூகம் ஒத்துளைப்பு வழங்க வேண்டும் எனவும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் இங்கு தெரிவித்தார்.
இந்தநிகழ்வில் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஜெலீல், கோட்டக்கல்வி அதிகாரி ஏ.எல்.சக்காப், முன்னாள் மாநகரசபை உறுப்பினர் ஏ.ஆர்.அமீர், பாடசாலை அசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர்கலந்து கொண்டனர்.







0 Comments:
Post a Comment