8 Jan 2017

கிழக்கு மாகாண புதிய அதிபர்களுக்கு பாடசாலைகள் வழங்கப்படல்லை

SHARE


கிழக்கு மாகாணத்திலிருந்து அதிபர் தரம் மூன்று பரீட்சையில் 327 பேர் சித்தி பெற்று அதிபர்களுக்கான நியமனங்களும் வழங்கப்பட்டுள்ள இந்நிலையில், இதுவரையில் அவ்வதிபர்களுக்கான பாடசாலைகள் வழங்கப்படவில்லை எனவே எதிர் வரும்
17 ஆம் திகதிக்கு முன்னர் இவ்வதிபர்களுக்கு உரிய பாடசாலைகள் வழங்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண தரம் பெற்ற புதிய அதிபர்கள் சங்கம் ஞாயிற்றுக் கிழமை (08) வேண்டுகோள் விடுத்துள்ளது.

இவ்விடையம் தொடர்பில் கிழக்கு மாகாண தரம் பெற்ற புதிய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் பே.திவாகரன் மற்றும் பொருளாளர் க.சந்திரகுமார் ஆகியேர் மேலும் தெரிவித்துள்ளதாவது….

எதிர் வரும் 17 ஆம் திகதிக்கு முன்னர் இவ்வதிபர்களுக்குரிய பாடசாலைகள் வழங்கப்படவில்லையாயின் எதிர் வரும் 18 ஆம் திகதி திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சிற்கு முன்னால் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுதல், இக்கவனயீர்ப்பு நடவடிக்கையும் தமக்கு பலனளிக்காத பட்சத்தில் தமக்குரிய நீதி வேண்டி  வழக்குத்தாக்கல் செய்யும் முஸ்த்தீப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும், நாம் என்போதும் நேர் சிந்தனையாளர்களாகவே கொண்டிருக்க வேண்டும் என தமக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் அதிகாரிகள் தம்மை எதிர் சிந்தனையாளர்களாகச் சிந்திக்க வைப்பது கவலையறிப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: