மட்டக்களப்பு ஏறாவூர் நகர விவசாய போதனாசிரியர் பிரிவிலுள்ள விவசாயிகள் நஞ்சற்ற விவசாய உற்பத்தி மேற்கொள்வதை ஊக்குவிக்கும்
பொருட்டு பிரதேச விவசாயிகள் 7 பேருக்கு சுமார் 4 இலட்சத்து 14 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உள்ளீடுகள் வழங்கப்பட்டதாக விவசாயப் போதனாசிரியை எம்.எச். முர்ஷிதா ஷிரீன் தெரிவித்தார்.
ஏறாவூர் நகரசபையில் சனிக்கிழமை (07.01.2017) இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் இந்த நஞ்சற்ற விவசாய உற்பத்திக்கான உள்ளீடுகளை வழங்கி வைத்தார்.
இதன்படி விவசாயி ஒருவருக்கு 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நஞ்சற்ற நாற்றுக்களை உற்பத்தி செய்யும் கூடாரமும், விவசாயிகள் மூவருக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரங்களும் மேலும் 4 விவசாயிகளுக்கு சுமார் 2 இலட்சத்து 19 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நானாவித உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
விவசாயத் திணைக்களத்தின் 2016 மாகாண உபமானிய ஊக்குவிப்பு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இந்த உள்ளீடுகள் வழங்கி வைக்கப்பட்டதாக விவசாயப் போதனாசிரியை எம்.எச். முர்ஷிதா ஷிரீன் மேலும் தெரிவித்தார்.
நிகழ்வில் விவசாயப் போதனாசிரியை எம்.எச். முர்ஷிதா ஷிரீன் உட்பட பயனாளிகளான பிரதேச விவசாயிகளும் ஏனைய அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment