29 Jan 2017

கரையோரமெங்கும் ஆற்றுவாழை எனும் வாவித் தாவரங்கள்

SHARE
கடந்த ஒரு சில நாட்களாக பெய்து வந்த அடைமழை மற்றும் வெள்ள நீரோட்டத்தின் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின்
ரையோரமெங்கும் ஆற்றுவாழை எனும் வாவித் தாவரங்கள் அள்ளுண்டு செல்லப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதேச மீனவர்களும் கிராம மக்களும் தெரிவிக்கின்றனர்.

காட்டாற்று வெள்ளம் வாவிக்குள் பெருக்கெடுத்து. வாவி நீர் கடலுக்குள் ஓடிக் கலந்ததால் கூடவே இந்த ஆற்றுவாழை எனப்படும் வாவித் தாவரங்களும் இயற்கையாகவே நீரோட்டத்தில் அள்ளுண்டு சென்று கடலில் கலந்து கடல் அலைகளால் மீண்டும் கடற்கரையில் ஒதுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு, கல்லடி, டச்பார், காத்தான்குடி, ஏறாவூர், களுவன்கேணி, களுவாஞ்சிக்குடி போன்ற கடற் கரைகள் வாவித் தாவரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

காத்தான்குடி கடற்கரையோரம் முழுமையாக வாவித் தாவரங்களால் சூழப்பட்டுள்ளது.

இது ஒரு இயற்கையான நிகழ்வு என்று கூறும் மீனவர்கள். ஆயினும் இம்முறை பருவமழை பொய்த்துப் போனதால் அளவுக்கதிகமான வாவித் தாவரங்களும் ஜெலி மீன்கள் (சொறி முட்டைகள்-துநடடல குiளா) எனும் உவர் நீர் உயிரிகளும் வாவியில் உற்பத்தியாகி தற்போதைய வெள்ளத்தோடு அவை பெருமளவில் கடலில் கலந்துள்ளன என்று தெரிவித்தனர்.

பல டொன் கணக்கான இந்த வாவித் தாவரங்கள் கடற்கரையை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளதால் தமது படகு மற்றும் தோணிகளை கடற்கரையில் நிறுத்த முடியாத சிரமம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை, வலைகளிலும் இந்த தாவரங்களும் சொறிமுட்டைகளும் சிக்கிக் கொள்வதால் மீன்பிடியிலும் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் மெலும் தெரிவிக்கின்றனர்.

SHARE

Author: verified_user

0 Comments: