மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவு பாலமுனை-நடுவோடை எனும் கடற்கரைப் பகுதியிலிருந்து கரையொதுங்கிய நிலையில்
ஞாயிற்றுக்கிழமை ஆணின் சடலமொன்று (29.01.2017) மீட்கப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்படாத இந்த சடலம் சுமார் 60 வயது மதிக்கத் தக்க ஒருவருடையாக இருக்கலாம் என மீனவர்கள் தெரிவித்தனர்.
வழமைபோன்று ஞாயிற்றுக்கிழமை காலை கடலுக்குச் சென்ற மீனவர்கள் நடுவோடைக் கடற்கரைப் பகுதியில் ஆணின் சடலம் கிடப்பதைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்தனர்.
பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டதாகத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் பற்றி காத்தான்குடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

0 Comments:
Post a Comment