5 Jan 2017

முஸ்லிம்காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதிஒதுக்கீடு

SHARE
நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதிஒதுக்கீடு ஆகியவற்றைக் கொண்டு வடகிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சகல சமூகத்தினரும் பயன்பெறத்தக்கவாறு நடப்பாண்டுக்கான அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வது தொடர்பான முக்கிய கலந்துரையாடலொன்று செவ்வாய்க்கிழமை (03) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ‘தாருஸ்ஸலாம்’ தலைமையகத்தில் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றது.
வடக்கிலும், கிழக்கிலும், ஏனைய மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்களை சரிவர இனம்காண்பதோடு, அவற்றை இயன்றவரை துரிதமாக செய்து முடிப்பதற்கு முனைப்புடன் செயற்படுமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் இக்கலந்துரையாடலில் பங்குபற்றியவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
நாட்டின் சகல பிரதேசங்களிலும் குறிப்பிடத்தக்களவு அபிவிருத்திகளை கடந்த ஆண்டைவிட சிறப்பாகவும், செயற்றிறனுடனும் முன்னெடுக்கவேண்டுமென இதன்போது தீர்மானிக்கப்பட்டது. 

இக்கலந்துரையாடலில்;, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.




SHARE

Author: verified_user

0 Comments: