26 Jan 2017

“சுத்தமான நகரம்" ஏறாவூரில் பொலிஸார் படையினர் இணைந்து துப்புரவுப் பணி

SHARE
ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஜயத்தையொட்டி மாவட்டம் தழுவிய ரீதியில் இடம்பெறும் “சுத்தமான நகரம்" எனும் வேலைத் திட்டத்தில் ஏறாவூர் நகர பிரதான
நெடுஞ்சாலை மருங்குகளை சுத்தம் செய்யும் செயற்திட்டத்தில் பொலிஸாரும் படையினரும் இணைந்து பங்கெடுத்துள்ளனர்.

ஏறாவூர் பொலிஸ் சுற்றாடல் பாதுகாப்புப் பிரிவினால் ஏறாவூர் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான  சிந்தக பீரிஸின் நெறிப்படுத்தலில் இந்த செயற்திட்டம் வியாழக்கிழமை (26.01.2017) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முதற்கட்டமாக ஏறாவூர் நகரின் மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலை மருங்குகளில் வடிகான்கள், மதகுகள், கவனிப்பாரற்ற பாழடைந்த கட்டிடங்களின் பகுதிகள் என்பன சுத்தம் செய்யப்பட்டன.

இந்த “சுத்தமான நகரம்" செயற்திட்டத்தில் ஏறாவூர் பொலிஸ் சுற்றாடல் பாதுகாப்புப் பிரிவினர், இலுப்படிச்சேனை படை முகாமிலுள்ள இராணுவத்தினர் உள்ளிட்டோரும் சுகாதாரத் திணைக்களத்தினரும் பங்குபற்றியுள்ளனர்.


SHARE

Author: verified_user

0 Comments: