றாணமடு இந்துமகாவித்தியாலயத்தில் உயர்தரப் பிரிவில் கணித விஞ்ஞானமற்றும் தொழினுட்பபிரிவு ஆரம்பிப்பதற்கு உதவி வழங்கியோருக்கு பாடசாலைச் சமூகத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
அண்மையில் வெளியாகியகல்விப் பொதுதராதர உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட றாணமடு இந்து மகாவித்தியாலய மாணவர்கள் முதற் தடiவையாக கணிதவிஞ்ஞானமற்றும்
தொழினுட்ப பாடங்களில்பரீட்சைக்கு தோற்றிசிறந்த பெறுபேற்றினை பெற்றுபாடசாலைக்குமாத்திரமல்லாது சம்மாந்துறை கல்விவலயத்திற்கும் மெருமை சேர்த்துள்ளனர்.
அதிகஷ்ட பிரதேசபாடசாலையில் இவ்வாறான பெறுபேறினை பெறுவதற்கு அடித்தளம் இட்டவர்கள் பலர் அந்தவகையில் விஞ்ஞான மற்றும் தொழினுட்ப பிரிவினை பாடசாலையில் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கிய கிழக்குமாகாணகல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் மற்றும் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் அவுதுல் நஸீர் ஆகியோர்களுக்கு சது.றாணமடு இந்து மகாவித்தியாலயத்தின் பாடசாலை சமூகத்தினர் நன்றியினையும் பாராட்டினையும் தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment