(துறையூர் தாஸன்)
பெண் கவிதைவெளிபொதுபோக்குகளும் மாற்றங்களும் எனும் இலக்கியக் கலந்துரையாடல் இன்று(12) ஒருநாள் பகல் பொழுதாகபாண்டிருப்பு இந்துமகாவித்தியாலயமண்டபத்தில் கவிஞர் றியாஸ் குரானாதலைமையில் நடைபெற்றது
எழுத்தாளரும் இலக்கியவாதியுமானதெளிவத்தை ஜோசப்,எழுத்தாளரும் பாராளுமன்றஉறுப்பினருமானகௌரவமல்லியப்புசந்திதிலகர்,பேராசிரியர் செ.யோகராஜா,ஏ.பி.எம்.இத்ரீஸ்,சிறுகதைஎழுத்தாளர் கௌரிபாலன் உள்ளிட்டஇலக்கியவாதிகள்,கவிஞர்கள்,எழுத்தாளர்கள்,கலந்துகொண்டிருந்தனர்.
லீனாமணிமேகலையின் சிச்சிலிஅந்தரக்கன்னியின் கவிதைதொகுப்புக்கானகருத்தாடல் உரையினைஎழுத்தாளரும் விமர்சகருமானமிஹாத்தும் பாலைவனலாந்தரின் உப்புவயலெங்கிலும் கல்மீன்களுக்குமானகருத்தாடல் உரையினைகவிதைப் பெண் அனாரும் முபீன் சாதிகாவின் அன்பின் ஆறாமொழிக்கானகருத்தாடல் உரையினைஎழுத்தாளரும் திரைப்பட இயக்குனருமான ஹஸீனும் நப்லாவின் நப்லாகவிதைகளை இளம் புனைவெழுத்தாளரும் விமர்சகருமான இமாமும் சமிலாவின் சமிலாயூசும் அலிகவிதைகளைசிந்தனையாளரும் எழுத்தாளருமான ஏ.பி.இத்ரீசும் சுஜாதாசெல்வராஜின் காலங்;களைகடந்துவருபன் கவிதைத் தொகுதிக்கானகருத்தாடல் உரையினைஎழுத்தாளரும் விமர்சகருமான ஜிப்ரி ஹாஸனும் நசீகாமுகைதீன் அரிந்தஅப்பிள் கோளங்களுக்கானகருத்தாடல் உரையினைஅரசியல் செயற்பாட்டாளரும் விமர்சகருமானசிராஜ் மஸ்ஹீரும் எம்.ஏ.ஸகியின் கவிதைகளுக்கானகருத்தாடல் உரையினை இளம் எழுத்தாளரும் கவிஞருமானசாஜித்தும் மலையகப் பெண்கவிகளின் அறிமுகத்தினைஎழுத்தாளரும் பதிப்பாளரும் பாராளுமன்றஉறுப்பினருமானகௌரவமல்லியப்புசந்திதிலகரும் ஆற்றியிருந்தார்.
கவிஞரும் இலக்கியவாதியுமானகௌரவமல்லியப்புசந்திதிலகர் தான் வடித்தமலையகப் பெண் தொடர்பானமலையகப் பெண்களின் இன்னோரன்னசவால்களைவெளிப்படுத்தும் கூடைபுராணம் எனும் கவிதையினைமிகவும்
சுவாரஸ்யமாகபடித்துக்காட்டிஅவையோரைசிந்திக்கவைத்ததுடன் இக்கவிதைக்குரியவிமர்சனத்தையும் பர்வையையும் அவையோர்தான் எழுதவேண்டுமெனஎனகேட்டுக்கொண்டார்.
இலக்கியமென்பதுதனியாககவிதையுடாகமாத்திரமின்றிசிறுகதைகள்,புனைவுகள் மற்றும் ஆய்வுகள்ஊடாகவும் வெளிப்படவேண்டுமெனவும்ஒரு இலக்கியசெயற்பாடுஎன்பதுஅதன் அர்ப்பணிப்பிலும் இருக்கிறது.அர்ப்பணிப்புடனானஉழைப்பின் மூலமாகவே இலக்கியசெயற்பாடுகள் மேற்கிளம்பும் எனஎழுத்தாளரும் இலக்கியவாதியுமானதெளிவத்தை ஜோசப் சிறப்புரையில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிகழ்வுகளுக்கானஏற்பாடுகளைகவிஞர் சுந்தர் நிதர்சனும் கவிஞர் டணீஸ்கரனும்அவரதுநண்பர்களும்செய்திருந்தமைகுறிப்பிடத்தக்கது.










0 Comments:
Post a Comment