26 Jan 2017

மெதடிஸ்த மத்திய கல்லூரியில் சிரமதானம்

SHARE
(க.விஜி)

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் இன்று(26.1.2017) வியாழக்கிழமை  பாடசாலை வளாகம்,பாடசாலை வெளிப்புறம் என்பன பாரிய சிரமதானம் மூலம் துப்பரவு மேற்கொள்ளப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் மாசிமாதம் முதலாம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்வதையிட்டு இச்சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.

பாடசாலையின் முதல்வர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் தலைமையில் நடைபெற்றபோது பிரதியதிபர் இராசதுரை பாஸ்கர், சுற்றாடல் பொறுப்பாசிரியர்களான சு.வரதராஜன்,கோ.கிசோர்,அல்பிறின்ட் ஜேசுசகாயம்,திருமதி விநாயகமூர்த்தி,திருமதி சுலோஜனா நடராசா,திருமதி ராதிகா ஜோகேந்திரராசா உட்பட ஆசிரியர்கள், சுற்றாடல் கழக மாணவர்கள்,சாரணர் மாணவர்கள்,மாணவர்கள் அதிபரின் வழிகாட்டல்களுடனும்,ஆலோசனையின் பேரிலும் பாரிய சிரமதானம் நடைபெற்றது.

இதன்போது நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்கள்,பற்றைகள், வடிகான்கள்,என்பன கடினமான மனித சக்தியுடன் மண்வெட்டி, குப்பைவாரி,கத்தி,விளக்குமாறு,குப்பைவாரி கொண்டு செய்யப்பட்டது.இதனை சுமார் 1500 மாணவர்கள் மிகவும் சிறப்பானமுறையில் செய்தார்கள்.சுமார் 28 குப்பைமூடைகள்  சேகரிக்கப்பட்டது.மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் மாவட்ட ரீதியில் சிரமதான நடவடிக்கைகளை செயற்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்
SHARE

Author: verified_user

0 Comments: