26 Jan 2017

விருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்தின் மருத்துவ முகாமும் பாடசாலை வாசிகசாலை திறப்புவிழாவும்.

SHARE
விருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்தின் வெல்லாவெளி பிரதேச 35, 37, 38 ம் கிராம மக்களுக்கான மருத்துவ முகாமும் பாடசாலை வாசிகசாலை திறப்புவிழாவும் காலை
22/01/2017 மட்/பட்/ மண்டூர் 37 நவகிரி வித்தியாலயத்தில் விருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்தின் தலைவர் யோ.சந்ரு தலைமையில் இடம்பெற்றது.

இம் மருத்துவ முகாமானது ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வருகை தந்த தமிழ் மருத்துவ அறிஞர் நிறுவன வைத்தியர்களும், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்திய சாலைமட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர்களும் சிறந்த சேவையினை வழங்கி இருந்தனர்.  இதன்போது சுமார் 210 நோயாளர்கள் பயன்பெற்றனர். 
இவ்வைத்திய முகாமில் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வருகை தந்த தமிழ் மருத்துவ அறிஞர் நிறுவன  பிரதிநிதி  என்.காந்தா  அவர்களும், வைத்தியர்களான கு.சுகுணன் எம்.. முருகமூர்த்திஎம்.. திருக்குமார்என்.. உமாகாந்எஸ்.கிரிதரன், ஆகியோர் வைத்திய சேவைகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
"குறுநிதிய செயற்பாட்டின் முலம் வாழ்வாதார அபிவிருத்தி" எனும் தொனிப்பொருளில் பொருளாதார மேம்பாடு தொடர்பாக விருட்சம் சமூக மேம்பாட்டின் ஆலோசகர் கணேசமூர்த்தி அவர்களினால் விசேட செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.


இதன்போது மட்/பட்/ மண்டூர் 37 நவகிரி வித்தியாலய நூலகத்துக்கான தளபாடங்களும், புத்தகங்களும் வழங்கிவைக்கப்பட்டன. நூலகத்துக்கான நிதியுதவியினை சிங்கப்பூரில் வசிக்கும் விருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்தின் ஆலோசகர் இராசதுரை திருமகன் சிறி அவர்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

















SHARE

Author: verified_user

0 Comments: