13 Jan 2017

பெரியநீலாவணை தொடர் மாடிவீட்டுத்திட்டத்தில் பாரிய சிரமதானம்

SHARE
(ஏ.எல்.எம்.ஷினாஸ்-பிராந்திய செய்தியாளர்) 

கல்முனை தலைமை பொலிஸ் அலுவலகம் ஏற்பாடு செய்த பாரிய சிரமதான நிகழ்வு (08) பெரியநீலாவணை தொடர் மாடிவீட்டுத்திட்டத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன பதவியேற்று இரண்டு ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு இந்த பிரமதானப்பணி நடைபெற்றன. இதில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.ஜே.எஸ்.கருணாசிங்க, பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுத்தீன், மக்கள் தொடா்பாடல் பொலிஸ் பொறுப்பத்காரி ஏ.எல்.ஏ.வாஹிட், பொலிஸ் பொறுப்பத்காரி ஏ.எம்.நவ்பர் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

பெரியநீலாவணை விசேட அதிரடிப்படையினர், பொதுமக்கள் ஆகியோரினதும் ஒத்துளைப்புடன் இந்த சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது. இறுதியில் பசுமையான சூழலை உருவாக்கும் நோக்கில் பயன்தரக்கூடிய மரங்களும் நாட்டிவைக்கப்பட்டன.






SHARE

Author: verified_user

0 Comments: