13 Jan 2017

மருதமுனையை சேர்ந்த சிறுவன் சுவர் சரிந்து விழுந்ததில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

SHARE
(ஏ.எல்.எம்.ஷினாஸ்-பிராந்திய செய்தியாளர்) 

மருதமுனை அல்-மினன் வீதியில் வசித்துவந்த நஜிமுத்தீன் அகமது ஜெஸ்லி என்ற சிறுவன் தனது தாயுடன் சம்மாந்துறையிலுள்ள உறவினர்களின் வீட்டுக்கு சென்றபோது, (12.01.2017)  மாலை சம்மாந்துறை மல்கம்பிட்டி மையவாடிவீதியிலுள்ள தமது உறவினர்களின் வீட்டின் சுற்றுமதில் தலைக்கு மேல் விழுந்ததில் குறித்த சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்தான்.
உயிரிழந்துள்ள 10 வயதுடைய நஜிமுத்தீன் அகமது ஜெஸ்லி, தரம் 05 இல் மருதமுனை அல்-மினன் வித்தியாலையத்தில் கல்விகற்று வந்தார். இதேவேளை உயிரிழந்த சிறுவனுடன் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றுவிட்ட சகோதரன் 08 வயதுடைய சௌபிக் தில்சான் அம்பாரை வைத்தியசாலையின் அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் சம்மாந்துறை அல்-அர்~த் மகாவித்தியாலையத்தில் தரம் 03 இல் கல்விகற்றுவருகின்றார்.

சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவனின் தாய் கருத்துத் தெரிவித்த போது,

இன்று(12) எனது சகோதரி எங்கள் வீட்டுக்கு வந்தார். பகல் உணவை சாப்பிடடுவிட்டு நாம் பேசிக்கொண்டிருந்தோம். எனது மகனும், எனது சகோதரியின் மகனும் அருகிலிருந்த சுவர் பக்கம் விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரென சுவர் சரிந்து விழுந்ததில் எனது சகோதரியின் மகன் உயிரிழந்துவிட்டார் என்றார்.

வீட்டின் சுற்றுமதிலின் ஒரு பகுதி சீமந்து கல்லினால் கட்டப்பட்டிருந்தது. குறித்த சுவரின் இடையில் பாதுகாப்பிற்காக போடப்படும் கொங்கிறீட் தூண் போடப்படவில்லை பாதுகாப்பற்ற இந்த சுவர்
அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது திடீரென சரிந்து விழுந்ததனாலயே சிறுவனின் உயிர் பிரிந்தது. நஜிமுத்தீன் அகமது ஜெஸ்லி என்ற சிறுவன் சம்பவம் நடைபெற்ற இடத்திலயே உயிரிழந்துள்ளார். 
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

உயிரிழந்த நஜிமுத்தீன் அகமது ஜெஸ்லியினுடைய ஜனாஸா கம்மாந்துறை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட பின்னர், வைத்தியசாலைக்கு வருகைதந்த சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி ஏ.எம்.நஸீன் ஜனாசாவை பார்வையிட்டதன் பின்னர் உறவினர்களிடம் கையளித்தார்.
உறவினர்களிகால் மருதமுனைக்கு கொண்டுவரப்பட்ட ஜனாஸா இன்று(13) வெள்ளிக்கிழமை காலை 7.00 மணிக்கு மருதமுனை பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: