29 Jan 2017

நற்பிட்டிமுனையில் ஆணின் சடலம் மீட்பு

SHARE

கல்முனை நற்பிட்டிமுனைக் கிராமத்தில் 30 வயதுடைய ஆணொருவரின் சடலம் அவர் வசித்த வீட்டிற்கு அருகிலிருந்த உறவினர்
ஒருவரின் வீட்டிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (29.01.2017) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நற்பிட்டிமுனை கிட்டங்கி வீதியைச் சேர்ந்த பொன்னுத்துரை தர்மேந்திரா (வயது 30) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இவர் சனிக்கிழமை (28.01.2017) பகல் தனது 30வது பிறந்த நாளைக் கொண்டாடுவதிலும் நண்பர்களுக்கு விருந்து வைத்துக் களிப்பதிலும் ஈடுபட்டிருந்துள்ளார்.

அதேவேளை ஞாயிற்றுக்கிழமை (29.01.2017) அவரது உறவினர் முறையான ஒருவர் இறந்த ஒருவருட ஆண்டு அமுது (ஒரு வருட திவசம்) உள்ளதால் அதற்காக பொருட்கள் வாங்குவதிலும் ஈடுபட்டிருந்துள்ளார்.

இவரது மரணம் கொலையா தற்கொலையா என்பது பற்றிய மேலதிக விசாரணைகளை கல்முனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 Comments: