பிற்பகல் 2 மணியளவில் மகிழடித்தீவு சந்தியில் நிருமாணிக்கப்பட்டுள்ள படுகொலை நினைவுத் தூபி அருகில் நடைபெற்றது. 1987 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை இறால் பண்ணையில் பயியாந்நிய நூறிற்கு மேற்பட்டோர் படுகொலை சொய்யப்பட்டிருந்தனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டிப்பளை பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது நினைவுத் தூபியில் வணக்கம் செலுத்தி, அஞ்சலி செலுத்தப்பட்டன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் கலந்து கொண்டு 30 வருட நீங்காத நினைவும் எப்போது மாறாத எம்மவர் துயரமும் எனும் தலைப்பிலும், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் கலந்து கொண்டு ஒன்றுபட்டு செயலாற்றி உரிமையினை வென்றெடுப்போம் எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினர்.
மேலும் இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் என பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment