22 Dec 2016

வடகிழக்கு பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஒற்றையாட்சி முறை மூலமாக காண முடியாது

SHARE
(இ.சுதா)

தற்போதைய உத்தேச அரசியலைப்பின் பிரகாரம் வடகிழக்கு பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஒற்றையாட்சி முறை மூலமாக காண முடியாது. இதற்கு சிறந்த வழி சமஷ்டி முறையிலான தீர்வே சிறந்ததாகும். காரணம் பல்லினக் கலாசாரத்தினை பின்பற்றும் பல சமூகக் கட்டமைப்பினைக் கொண்டோர் வாழும் நிலையில் ஒற்றையாட்சி பொருத்தப் பாடுடையதல்ல யதார்த்த பூர்வமாக சிந்திக்கின்ற போது பதின்மூன்றாவது அரசியலமைப்பில் உள்ள விடயங்களை
மூடி மறைக்கின்ற தெளிவில்லாத முறையாகும்.இது ஒரு அரசசாசன நியதிகளுக்கு அமைவான கட்டமைப்பினைக் கொண்ட முறையல்ல என்பது தெளிவாகிறது.
கடந்தவாரம் கொழும்பிலுள்ள தமது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற புத்திஜீவிகள் மற்றும் அரசியல் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலின் போது கருத்துத் தெரிவிக்கும் போதே முன்னாள் பிரதி அமைச்சரும் தற்போதைய வர்த்த வணிக அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகருமான சோமசுந்தரம் கணேசமூர்த்தி இவ்வாறு தெரிவித்தார்.

அவர்மேலும் கருத்துத் தெரிவிக்கையில் பலர் ஒற்றையாட்சி சிறந்த அரசியல் தீர்வு என நினைக்கின்றனர் அது பிழையான கருத்தாகும். விரிவு படுத்தப்பட்ட அரசியல் சாசனங்களுக்கு அமைவாக தீர்வு கிடைக்கப் பெற வேண்டும்.தந்தை செல்வா பண்டா ஒப்பந்தங்களிலும் சமஷ்டி முறைதான் வழியுறுத்தப்பட்டன.இதுவே தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணக் கூடிய வழிமுறையாகும்.இதற்கான வழிவகையினை வழங்குவதில் ஐக்கிய தேசியக் கட்சியானது இதய சுத்தியுடன் செயற்படுகிறது.வடகிழக்கு தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதில் அரசாங்கம் உறுதியாகவுள்ளது.

மாகாண சபைகளைப் பொறுத்தளவில் காணி அதிகாரங்கள் தெளிவு படுத்தப்பட வேண்டும். மத்திய அரசாங்கத்தின் தலையீட்டின் கீழ் உள்ள காணி தொடர்பான விடயங்கள் மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும்.மாகாண சபைகளில் ஆளுநர்களின் அதிகாரமானது அதிகரிக்கப்பட்டுள்ளன.மாகாண நிருவாக கட்டமைப்பில் ஆளுநரின் தலையீட்டினைக் குறைத்து மாகாண ரீதியான நிருவாக கட்டடைப்பு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

ஆளுநர்களின் அதிகாரங்களுடன் மாகாண சபைகளின் அனைத்துச் செயற்பாடுகளும் அமைவதுதான் பிரச்சினையாகும்.மாகாண சபைகளின் நேரடியான தலையீட்டினை காட்ட முடியாதவாறு மாகாண சபைளுக்கு அதிகாரம் பகிந்தளிக்கப்பட வேண்டும்.வடகிழக்கில் மாத்திம் எதிர்க்கட்சியின் ஆதிக்கம் காணப்படுவதால் பிரச்சினை எழுகின்றன ஆனால் ஏனைய மாகாணங்களில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிகளின் ஆதிக்கம் காணப்படுவதால் பிரச்சினைகள் ஏற்படுவதில்லை காரணம் கட்சிகளின் கொள்கைகளுக்கு அமைவாக ஆளுநர்களின் செயற்பாடுகள் அமையப் பெறுகின்றமையால் மாகாண சபைகளில் பிரச்சினை எழுவது குறைவு.

நாட்டில்எதிர்கட்சி மாகாண அதிகாரங்களை ஏற்கின்ற சந்தர்ப்பத்தில் இந்திய அரசியலமைப்பு யாப்பில் பின்பற்றப்படுவதனைப் போன்று மானிலங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டால் எதுவிதமான பிரச்சினைகளும் ஏற்படாது. இவ்வாறான நியதியினை சுவிஸ்லாந்து பின்பற்றுகின்றது.பல்லின கலாசாரம் பின்பற்றப்படும் நாட்டில் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு மானில அதிகாரம் வழங்கப்படுகின்றன.இதே நியதி எமது நாட்டில் பின்பற்றப்பட்டால் எதுவிதமான பிரச்சினைகளும் ஏற்படாது.எனவே தமிழர்களுக்கு தீர்வு வழங்குவதில் அரசாங்கம் உறுதியாகவுள்ளதாகத் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: