மகப்பேற்று மனையாக இருந்த இடத்தை ஆதார வைத்தியசாலை என்ற நிலை வரை தரமுயர்த்துவதில் அரசியல்வாதிகளின் பங்கு அளப்பரியது என ஏறாவூர் ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் எம்.எச்.எம். தாரிக் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ். சுபைர் அவர்களின் ஒரு இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வைத்தியசாலைக்கு ஒலிபெருக்கி சாதனங்கள் கையளிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (27.12.2016) ஏறாவூர் அதார வைத்தியசாலையில் இடம்பெற்றது.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய வைத்தியர் தாரிக்@ ஏறாவூரின் முன்னோடிகளால் இந்த மகப்பேற்று மருத்துவமனைக்கு முயற்சி தொடங்கப்பட்டது.
காலஞ்சென்ற பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க காலத்தில் ஏறாவூரில் ஒரு மகப்பேற்று மனையாகத் தொடங்கப்பட்ட இவ்வைத்தியசாலை அதற்குப் பின்னர் வந்த சகல அரசியல்வாதிகளினதும் ஒத்துழைப்பினால் அபிவிருத்தி கண்டு வந்துள்ளது.
கடைசியாக இதனை ஆதார வைத்தியசாலையாகத் தரமுயர்த்துவதில் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ். சுபைர் அரும்பணியாற்றியிருக்கின்றார்.
தற்போதைய கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்களில் இவ்வைத்தியசாலை உள்வாங்கப்பட்டுள்தோடு எதிர்காலத்தில் இது சகல வசதிகளும் கொண்ட வைத்தியசாலையாக மிளிரும் என்பதில் ஐயமில்லை.” என்றார்
0 Comments:
Post a Comment