27 Dec 2016

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின்எஞ்சியிருக்கும் அனைத்து நிர்மாண வேலைகளும் ஜனவரி 20 திகதிக்கு முன்னதாக நிறைவு செய்யப்பட வேண்டும்.

SHARE
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் கட்டிட திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி வரவுள்ளதால் எஞ்சியிருக்கும் அனைத்து நிர்மாண வேலைகளும் ஜனவரி 20 திகதிக்கு முன்னதாக நிறைவு செய்யப்பட வேண்டும். என கிழக்கு மாகாண சபை சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீரினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது
எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி களுவாஞ்சிகு ஆதார வைத்தியசாலையின் கட்டிடம் கௌரவ ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன அவர்களினால் திறந்து வைக்கப்படவுள்ள நிலையில் இத் திறப்பு விழா சம்பந்தமாக சுகாதார திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையடால் ஒன்று களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றது.இதன் போதே குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் க.முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் வைத்திய அத்தியட்சகர் ஜீ.சுகுணன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகசபை, சுகாதார திணைக்கள பிரதம கணக்காளர் ஏ.எம்.எம். ரவீக், கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் பொறியல் சேவைகள் பொறியியலாளர் வேல்மாணிக்கம், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கிரேஸ், கணக்காளர் எஸ்.விக்னராஜா ஜெய்க்கா திட்ட பொறியிலாளர், வைத்தியசாலை அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள், என பலரும் கலந்து கொண்டனர்.

    குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட அமைச்சர்  சுகாதார துறைசார்ந்த அதிகாரிகளுக்கு இக் கட்டிடத்திறப்பு விழா சம்பந்தமாக உள்ள கடைப்பாடு தொடர்பாக  எடுத்துரைக்கப்பட்டதுடன், வைத்திய அத்தியட்சகரிடத்தில் முடிக்கப்பட வேண்டிய வேலைகள் தொடர்பில் கேட்டு அறிந்து  கொண்டதுடன், நேரில் சென்று பார்வையிட்டும் தெரிந்து கொண்டார். இதன் பின்னரே  எதிர்வரும் ஜனவரிமாதம் 20 திகதிக்கு முன்னதாக அனைத்து வேலைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என குறித்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது

















SHARE

Author: verified_user

0 Comments: